ஈழ காவியம்: முன்னுரை
இன்று காலை நண்பர் மா சிவக்குமார் அவர்களிடம் இந்த வார நிகழ்ச்சிகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது தமிழ் ஈழ மக்களின் மொழிப் போராட்டங்கள், அவர்களுக்கும் நமக்கும் இருந்துவந்த தொப்புள்கொடி உறவு, இலங்கை தமிழ் மக்களின் காந்திய, சனநாயகப் போராட்டங்களின் தோல்வி, ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த கதை, தமிழக முதல்வர்களின் அக்கறை(!) என்று எங்கள் பேச்சின் திசை எனது யுத்தம் பாதித்த மக்களை பற்றி சென்றது. எனது எண்ணங்கள், சிந்தனைகள் இவற்றைக் கேட்ட நண்பர் சிவா, "செல்லா, இவ்வளவு விசயங்கள் எனக்கே இப்பொழுதுதான் தெரிகிறது. இதை ஏன் நீங்கள் ஒரு தொடராக/புத்தகமாக எழுதக் கூடாது?" என்று கேட்டார். நானும் யோசித்தேன்... இத்தனை வீரமான ஒரு போராட்டம் உலகிலேயே வியட்னாமுக்குப் பிறகு, அயர்லாந்த்துக்குப் பிறகு இங்குதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது ... ஆனால் இந்த கண்ணீரும் செந்நீரும் கலந்து ஓடும் ஈழத்தின் கதையை இன்றைய இளம் தலைமுறையினர் அவ்வளவு அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.. காரணம்எளிமையான முறையில் அது சொல்லப்படவில்லை ...எனவே இந்த வீரகாவியத்தை எளிய தமிழில் உங்கள் முன் தொடங்குகிறேன்...
அன்புடன் ஓசை செல்லா
அன்புடன் ஓசை செல்லா
